சூதாடிய குற்றத்திற்காக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2017 முதல் 2019ஆம் ஆண்டு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில், அவர் 303 முறை சூதாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐசிசி விதிப்படி அது குற்றம் என்பதால், சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க அவருக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், டி20 உலகக் கோப்பையில் அவரால் விளையாட முடியாது. டி20 உலகக் கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் வருகிற 9ம் தேதி மோதவுள்ளன. 2 அணிகளும் டி20 உலகக் கோப்பையில் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 6, பாகிஸ்தான் 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.