பிரபல பாலிவுட் நடிகர் அரவிந்த் குமார் (46) மாரடைப்பால் இன்று மும்பையில் காலமானார். டிவி சீரியல் ஷூட்டிங்கிற்குப் புறப்பட்ட அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அரவிந்த் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அரவிந்த் குமார் பல ஹிந்தி படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார். அக்டோபர் 2009 முதல் ஆகஸ்ட் 15, 2014 வரை எஸ்ஏபி டிவியில் இவர் நடித்த லபடகஞ்ச் சீரியல் ஒளிபரப்பப்பட்டது.