நடிகர் விஜய் இன்றைய தினம் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை எதற்க்காக என்று செய்தியாளர்களிடம் கூறிய புஸ்ஸி ஆனந்த்,  அரியலூர், கோயம்புத்தூர், ஊட்டி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி என  எல்லா ஊர்லயும் இருந்தும் மக்கள் மன்றத்தினர் வந்தாங்க.

234 தொகுதியிலும் உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ – மாணவிகளின் பரிசளிப்பு விழாவுக்கு அழைத்து வந்த மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க அன்று நேரம் கிடைக்கவில்லை. அதனால் தனியாக கூப்பிட்டு இன்று அவர்கள் எல்லோரிடமும் ஒவ்வொரு   மாவட்ட தலைவர்,  ஒருங்கிணைப்பாளர், பிற அணிகள் என அனைவரையும் சந்தித்து பேசினார்.

யார் எல்லாம் மாணவ மாணவிகளை கூப்பிட்டு வந்தார்களோ, பெற்றோரோடு வந்தார்களோ அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, அவர்களுடைய குடும்பத்தை விசாரித்தார்.  எல்லாரும் விஜய்யுடன் பேசினார்.முதலில் குடும்பத்தை பாருங்கள், அடுத்து தொழிலை பாருங்கள். அப்படி தான் தளபதி சொன்னார். விஜய்யுடன் நிர்வாகிகள் போட்டோ சூட் எடுப்பது என்பது எப்போதுமே நடக்கக்கூடிய ஒரு விஷயம் தான் என தெரிவித்தார்.