பிரபல நடிகர் பிஜிலி ரமேஷ். இவர் டிக் டாக் செயலியில் வீடியோ போட்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டார். இதன் மூலம் அவருக்கு கிடைத்த புகழினால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் பொன்மகள் வந்தாள், நட்பே துணை மற்றும் கோமாளி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் உடல்நலக்குறைவின் காரணமாக சமீப காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்று இன்று காலை உயிரிழந்துள்ளார். மேலும் அவருடைய மறைவு திரை உலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருடைய இறுதிச் சடங்கு சென்னை எம்ஜிஆர் பகுதியில் உல்லா அவருடைய வீட்டில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.