பாரத் பந்த் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கிருஷ்ணா சென்னையில் இன்று காலமானார். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், என் டி ஆர், நாகேஸ்வர ராவ், சிரஞ்சீவி, ஜெயசுதா மற்றும் ஸ்ரீதேவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார். தயாரிப்பாளர் தில் ராஜுவை சினிமாவில் வளர்த்து விட்டதும் இவர்தான். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இவர் சென்னையில் இன்று காலமானார்.இவரின் மறைவுக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.