லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் “லியோ” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் மும்முரமாக நடந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.

இந்த நிலையில் சென்னையில் தொடங்கவுள்ள லியோ படத்தின் சூட்டிங்கில் கமல்ஹாசன் பங்கேற்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்பே பகத் பாசில் இந்த படத்தில் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. தற்போது கமல் இணைய போகிறார் என்பதால் LCU-வில் லியோ கண்டிப்பாக உள்ளது என ரசிகர்கள் உறுதிசெய்து இத்தகவலை வைரலாக்கி வருகின்றனர்.