மலையாள திரை உலகின் போக்கை மாற்றிய புகழ்பெற்ற இயக்குனர் KG ஜார்ஜ் இன்று காலமானார். வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்ற ஸ்வப்னதானம், ஊழ்கடல் போன்ற திரைப்படங்களை இயக்கிய இவர் தேசிய மற்றும் கேரளா அளவிலான பல விருதுகளை வென்றுள்ளார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த இவருக்கு 77 வயதாகும் நிலையில் இன்று கொச்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.