புதுச்சேரி மாநிலத்தில் செல்போன் கடை உரிமையாளர் மனைவியை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்ட துணை நடிகர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து செல்போன் கடைக்காரர் சதீஷ்குமார் அளித்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சதீஷ்குமார் தற்போது நடத்தி வரும் செல்போன் கடையை, பிச்சைக்காரன் 1, ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்துள்ள துணை நடிகர் செல்வம் முன்பு நடத்தி வந்துள்ளார்.

இதற்காக 10 லட்சம் ரூபாயை கொடுக்காமல் சதீஷ் குமார் இழுத்தடித்துள்ளார். இதனால் சதீஷ்குமாரை அசிங்கப்படுத்துவதற்காக போலி ஆடியோ தயாரித்து செல்வம் பரப்பியுள்ளதாக கூறப்படுகிறது.