காமெடி நடிகர் வெங்கடேசனின் இருகால்களையும் அடித்து உடைத்த வழக்கில் பாஜக நிர்வாகி தமிழ்ச்சங்கு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பாஜக நிர்வாகி தமிழ்ச்சங்கு, கார் ஓட்டுநர் துளசி கைது செய்யப்பட்டுள்ளனர். வெங்கடேசனின் மனைவி பானுமதி, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, கூலிப்படையை ஏவி, தாக்குதல் நடத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.