தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மக்களின் பயன்பாட்டிற்கு மின்சார ரயில் சேவை கொண்டுவரப்பட்டது. குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயிலாக அந்த ரயில் சேவை செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் உடன் பறக்கும் ரயில்களை இணைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பறக்கும் ரயில் நிலையங்களை மறு சீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையங்கள் போல மாற்றுவதற்கு சி எம் டி ஏ முடிவு செய்துள்ளது. அந்தப் பணிகளும் தற்போது நடைபெற்று வருவதால் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் சென்னை பறக்கும் ரயிலின் சேவை வருகின்ற 2025 ஆம் ஆண்டு தான் இணைக்கப்படும் என்று சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.