தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் ஜெயசீலன். இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயுடன் தெறி, தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இவருக்கு 40 வயது ஆகும் நிலையில் மஞ்சள் காமாலை நோயின் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
