மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் விஷால் நடிப்பில் ரிலீஸ் ஆன ஆக்ஷன் படத்தின் வாயிலாக அறிமுகமானார். இதையடுத்து கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது இவர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் கிங் ஆஃப் கோதா படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அதன்பின் கோயிலுக்கு வெளியில் வந்த அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.