தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த படம் ‘அகண்டா 2’, கடந்த 12ம் தேதி வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. படத்தை போயபட்டி சீனு இயக்கியுள்ளார். இதில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஆதி பினிசெட்டி, கபீர் துல்ஹன் சிங், சாஸ்வதா சட்டர்ஜி, அச்யுத் குமார், பூர்ணா, ஹர்ஷா, ஜெகபதி பாபு, ராச்சா ரவி, ஐயப்பா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெறுவதோடு, பாலகிருஷ்ணாவின் கேரியரின் சிறந்த படங்களில் ஒன்றாகும் என விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த படம் பற்றி சமீபத்தில் சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் இயக்குநர் போயபட்டி சீனு தெரிவித்ததாவது, பிரதமர் நரேந்திர மோடி ‘அகண்டா 2’ படத்தை பார்க்க விரும்புகிறார். பிரதமர் மோடி, படத்தைப் பார்த்து “இவ்வளவு நல்ல படத்தை நாமும் பார்த்து ஆதரவளிக்க வேண்டும்” என கூறி, திரைப்படத்தை பார்வையிட முடிவு செய்ததாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.