அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் எனவும் 10 நாட்களுக்குள் இதனை எடப்பாடி பழனிசாமி செய்யாவிடில் அந்த பணிகளை நானே மேற்கொள்வேன் எனவும் கூறினார். அதாவது ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருவதால் மீண்டும் ஒற்றுமையாக இருந்தால் மட்டும்தான் அடுத்து வரும் தேர்தலின் ஜெயிக்க முடியும் என்பதற்காக செங்கோட்டையன் அவ்வாறு கூறினார். இதற்காக அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவரை கட்சி பொறுப்பிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று டெல்லி சென்ற செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தார்.
பாஜக ஆலோசனையின் பேரிலேயே அதிமுகவை ஒருங்கிணைக்க அவர் முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை அரசியல் வட்டாரத்தில் சற்று பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து செங்கோட்டையன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் பெயர்களுக்கு பின்னால் ஜெயலலிதா, எம்ஜிஆர் பெயரை அவர் குறிப்பிட்டதால் அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இதோ அந்த அறிக்கை,
இன்றைய உலகத் தலைவர்களில் முதன்மையானவராக திகழும் பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களாலும், இந்திய திருநாட்டின் இன்றைய இரும்பு மனிதராக திகழும் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்களாலும் முன்மொழியப்பட்டவரும், இதயதெய்வம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவரும், நம் தமிழ் தேசத்தின் தனிப்பெரும் தலைவர் மேதகு ஆளுநர் உயர்திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரத திருநாட்டின் துணை குடியரசுத் தலைவராக தேர்வு பெற்று உள்ளது இந்நாட்டின் பொன்னேட்டில் எழுதப்படும் திருநாளாகும். தன் பணிகாலத்தில் இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்துச் செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய உலகத் தலைவர்களில் முதன்மையானவராக திகழும் பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களாலும், இந்திய திருநாட்டின் இன்றைய இரும்பு மனிதராக திகழும் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்களாலும் முன்மொழியப்பட்டவரும், இதயதெய்வம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி… pic.twitter.com/WHLkEo1I73
— K.A Sengottaiyan (@KASengottaiyan) September 10, 2025
