தமிழ் சினிமாவில் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சோனா, நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் தனது தந்தை குறித்து அண்மையில் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தனது திரையுலக அனுபவங்கள் குறித்துப் பேசிய சோனா, “வடிவேலு ஒரு மிகச்சிறந்த கலைஞர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவருடன் பணிபுரிந்த அனுபவம் எனக்கு மிகவும் மோசமானது. குறிப்பாக ‘குசேலன்’ படப்பிடிப்பின் போது அவர் நடந்துகொண்ட விதம் என்னை மனதளவில் மிகவும் பாதித்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அவருடன் ஜோடியாக நடிக்க 16 பட வாய்ப்புகள் வந்தன.
ஆனால், சுயமரியாதையை இழந்து சம்பாதிக்கும் பணம் எனக்குத் தேவையில்லை என்பதால் அத்தனை வாய்ப்புகளையும் நிராகரித்துவிட்டேன். தெருவில் நின்று பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை, யாரிடமும் குனிந்து போக மாட்டேன்,” என ஆவேசமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது குடும்ப வாழ்க்கை குறித்துப் பேசிய அவர், தனது தந்தை குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். “என் அப்பா மிகவும் மோசமான மனிதர். ஆண்களுக்குரிய திமிரு அவரிடம் அதிகமாக இருந்தது. பெண்கள் என்றாலே உடலுறவுக்காக மட்டுமே இருப்பவர்கள் என்ற எண்ணம் அவருக்கு உண்டு. என் கண் முன்னாலேயே என் அம்மாவை அவர் பலமுறை கொடுமைப்படுத்தியுள்ளார். என்னிடமும் அவர் மிகவும் கடுமையாகவே நடந்து கொண்டார் என சோனா கண்ணீர் மல்கக் கூறினார்.
மேலும் திரையுலகில் செல்வாக்கு மிக்க ஒரு நடிகரை எதிர்த்தும், தனது சொந்தத் தந்தையின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டியும் சோனா பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
