விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் பிச்சைக்காரன் 2. 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைகாரன் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 எடுக்க முடிவு செய்தார். சமீபத்தில் இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று , மாங்காடு மூவிஸ் நிறுவனம் வழக்கு பதிவு செய்திருந்தது. இந்நிலையில் தற்போது பிச்சைக்காரன் 2 மே 19 ஆம் தேதி எந்த வித தடை இல்லாமல் ரிலீஸ் ஆகும் எனவும் படத்தின் வசூல் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.