விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசர்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஏழாவது சீசன் தொடங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இந்த மாதம் ஏழாவது சீசன் தொடங்க உள்ள நிலையில் இதில் கலந்து கொள்ள உள்ள சில போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி இந்த சீசனில் ஜாக்குலின், ரட்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர் மற்றும் கோவையை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருப்பதாக ப்ரோமோவில் கமல் கூறி இருந்தார். அதனால் நிகழ்ச்சி எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாலிமர் ரஞ்சித், நிலா நடிகை, வி.ஜே. பார்வதி, ரேகா நாயர், அம்மு அபிராமி, ஜாக்குலின், உமா ரியாஸ், ரவீனா தாஹா, மகாபா ஆனந்த்  ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.