உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ் பகுதியில், லக்ஷ்மண் ஜூலா அருகே பிகினி அணிந்து கங்கை நதியில் நீராடிய வெளிநாட்டு பெண்ணின் காணொளி இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட அந்தக் காணொளியில், அந்தப் பெண் கங்கை நதிக்கரையில் நின்று, நீரில் இறங்குவதற்கு முன் கைகளை கூப்பி பிரார்த்தனை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த காட்சி பரவியதையடுத்து, சமூக வலைதளங்களில் பல்வேறு எதிர்வினைகள் பதிவாகியுள்ளன.
इस महिला को Ganga जी मे ऐसे नहीं जाना चाहिए,
बल्कि साड़ी पहन कर घुँघट डाल कर नहाने जाना चाहिए 😂😂😂 pic.twitter.com/14cod9Gq2T
— ❤️ RaGa❤️ (@RaGakiDeewani) October 21, 2025
சிலர், “புனித ஆற்றில் இப்படியான உடையுடன் நீராடுவது மத உணர்வுகளுக்கு அவமரியாதை” என்று கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், மற்றொரு தரப்பினர், சுற்றுலாப் பயணிகளின் செயல்களை ஆதரித்து, ஆண்கள் இதே இடங்களில் குறைந்த உடையுடன் நீராடும்போது அதே அளவு விமர்சனம் வருவதில்லை என இரட்டை நிலைப்பாட்டைக் கேள்வி எழுப்பினர்.
ஒரு சமூக ஊடக பயனர், “ஆண்கள் உள்ளாடை அணிந்து குளிக்கும் போது அவமரியாதை என்று யாரும் சொல்லவில்லை; ஆனால் ஒரு பெண் குளிக்கும்போது ஏன்?” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், “அந்தப் பெண்ணின் நோக்கம் தவறாக இல்லை. அவள் அந்த இடத்தின் மதப்பொருளை முழுமையாக அறிந்திருக்காமலும் இருக்கலாம்,” என்று குறிப்பிட்டார்.
சிலர் நகைச்சுவையாக கருத்து பகிர்ந்தும் உள்ளனர். ஒருவர், லக்ஸ் சோப்புடன் குளிக்க வரும் அண்ணன்களுக்கு இதை சகித்துக் கொள்ள முடியாமல் போகிறது போல,” என்று பதிவிட்டார்.
மேலும் இந்த வீடியோ தற்போது பல லட்சம் பார்வைகள் பெற்றுள்ளதுடன், மதம், கலாசாரம் மற்றும் சுற்றுலா மரியாதை குறித்த விவாதத்தையும் சமூக ஊடகங்களில் தூண்டியுள்ளது.
