இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. இருந்தாலும் இந்த முறை பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

அதன்படி விவசாயிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் வருடாந்திர உதவித்தொகை பட்ஜெட்டில் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது அரசு கவனம் செலுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் பெண் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது