பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை www.tnou.ac.in/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பு பல்கலை மானிய குழுவான யுஜிசி மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரம் பெற்று நடத்தப்படுகிறது என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை பதிவாளர் செந்தில்குமார் கூறியுள்ளார். எனவே விருப்பமுள்ள மாணவர்கள் ஜனவரி 20ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து விடுங்கள்.