பொதுமக்களின் தலையில் மற்றுமொரு சுமையை ஏற்றும் வகையில், நாடு முழுவதும் பால் விலையை உயர்த்துவதாக அமுல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமுல் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வு நாளை (மே 14) முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் திணறி வரும் நிலையில், தினசரி தேவையான பாலின் விலை உயர்ந்திருப்பது நடுத்தர குடும்பத்தினர் மற்றும் இல்லத்தரசிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.