தென்காசி அருகே சிவகிரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா வாங்கி வந்து, அல்வா வடிவில் விற்று வந்த ஈஸ்வரமூர்த்தி(22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
சிவகிரி அருகே கருவட்டாம்பாறை பகுதியில் ரோந்து சென்ற போலீசாரை கண்டு இருவரும் தப்பியோட முயன்றனர். பின்னர் வனத்துறையினர் மற்றும் போலீசார் விரட்டி அவர்களை பிடித்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து கஞ்சா, இரு பைக்குகள் மற்றும் அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் ஈஸ்வரமூர்த்தியை பாளை சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
