மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியானது. அதில் காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தர்மபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் பாமக போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளது.