அமெரிக்காவில் தனியாக வசிக்கும் முதியவர்களின் நலனை உறுதி செய்ய அந்நாட்டு அரசு ‘ஆர் யூ ஓகே?’ என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், முதியவர்களுக்குத் தினமும் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டு அவர்கள் நலமுடன் இருக்கிறார்களா என்பது உறுதி செய்யப்படும்.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், காவல்துறையினரிடமிருந்து வந்த தொடர் அழைப்புகளைப் பல நாட்களாக ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினரும் போலீசாரும், அவருக்கு ஏதேனும் விபரீதம் நேர்ந்திருக்குமோ எனப் பதற்றமடைந்தனர்.

உடனடியாக அவரது வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். ஆனால், அங்கே அவர்கள் கண்ட காட்சி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த மூதாட்டி எவ்வித பாதிப்புமின்றி, மிகவும் உற்சாகமாக வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

கேமிங்கில் அவர் காதுகளில் ‘ஹெட்போன்’ அணிந்து கொண்டு முழுமையாக மூழ்கி இருந்ததால், போலீசாரின் அழைப்பையோ அல்லது அவர்கள் கதவைத் தட்டிய சத்தத்தையோ அவரால் கவனிக்க முடியவில்லை என்பது பின்னர் தெரியவந்தது. “பாட்டி, இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா?” என்று கேட்கும் வகையில் அமைந்த இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.