தொழில்நுட்பம் என்பது வெறும் காட்சிப் பொருளாக இல்லாமல், மனித குலத்தின் துயர் துடைக்கும் கருவியாக இருக்க வேண்டும்” என்பதைச் மெய்ப்பிக்கும் வகையில், சீனாவில் நடைபெற்ற கண்காட்சியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. சீனாவில் புகழ்பெற்ற ‘கேண்டன்’ வர்த்தகக் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சீன நிறுவனங்கள் தயாரித்துள்ள நவீன ‘எக்ஸோஸ்கெலட்டன்’ எனப்படும் ரோபோடிக் உடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இடுப்புக்குக் கீழ் இயக்கம் இல்லாத பாதிப்புக்குள்ளான (Lower-body disabilities) ஒரு வெளிநாட்டுப் பெண்மணி இந்தக் கண்காட்சிக்கு வந்திருந்தார். அவர் அங்கிருந்த ரோபோடிக் எக்ஸோஸ்கெலட்டன் கருவியைப் பொருத்திக்கொண்டு, பரீட்சார்த்தமாக எழுந்து நிற்க முயன்றார். பல ஆண்டுகளாகச் சக்கர நாற்காலியிலேயே முடங்கிக் கிடந்த அந்தப் பெண், அந்த இயந்திரத்தின் உதவியோடு சுயமாக எழுந்து நின்றது மட்டுமன்றி, ஒரு சாதாரண மனிதரைப் போல நடைபயிற்சியும் மேற்கொண்டார்.
தங்கள் வீட்டுப் பெண் யாருடைய உதவியும் இன்றி, சுயமாக எழுந்து நடப்பதைக் கண்ட அவரது குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினர். அங்கிருந்த மற்ற பார்வையாளர்களும் இந்த அதிசயத்தைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தனர். வெறும் பொழுதுபோக்கிற்காகவோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ இல்லாமல், மனிதனின் அடிப்படைத் தேவைகளையும், குறைகளையும் நிவர்த்தி செய்யும் இத்தகைய தொழில்நுட்பங்களை உலக நாடுகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றன. “தொழில்நுட்பம் மக்களுக்காகவே” என்ற வாசகத்திற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்தப் பெண்ணின் வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், “சீனாவின் இந்தத் தொழில்நுட்பம் பல கோடி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும்” என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
At the Canton Fair, a foreign woman with lower-body disabilities stood and walked on her own using a Chinese exoskeleton. Her family was moved to tears.
Technology is for people, not for show. pic.twitter.com/y2doO6ULNm
— Li Zexin 李泽欣 (@XH_Lee23) April 20, 2026
