மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், உடற்பயிற்சிக் கூடம் ஒன்றின் வெளியே வைக்கப்பட்டிருந்த பொதுப் பயன்பாட்டிற்கான 40 கிலோ எடையுள்ள வாட்டர் கூலரை நபர் ஒருவர் பட்டப்பகலில் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் துணிச்சலான திருட்டுச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தத் திருடன் வாட்டர் கூலரின் இணைப்புகளைத் துண்டித்து, அதனை அசால்ட்டாகத் தனது தோளில் தூக்கிச் சுமந்து கொண்டு, எவ்வித பயமுமின்றி அப்பகுதியைக் கடந்து நடந்து சென்றுள்ளார்.

“>

இந்தச் சம்பவத்தின் போது, அமராவதி நகரிலேயே மிக அதிக போக்குவரத்து நெரிசலும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த பகுதியான ‘ராஜ்கமல் சௌக்’ சந்திப்பு வழியாகவே அந்த நபர் வாட்டர் கூலரைத் தோளில் சுமந்தபடி நடந்து சென்றுள்ளார்.

மேலும் இவ்வளவு கூட்ட நெரிசலான இடத்தைக் கடந்து சென்றபோதிலும், அங்கிருந்த பொதுமக்களோ அல்லது வாகன ஓட்டிகளோ எவரும் அவரைத் தடுத்து நிறுத்தவோ, சந்தேகப்பட்டு கேள்வி கேட்கவோ இல்லை. இது பொதுமக்களின் விழிப்புணர்வு மற்றும் நகர்ப்புறப் பாதுகாப்பு குறித்தப் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது தொடர்பாகக் பாதிக்கப்பட்ட உரிமையாளரான திரு. ரோடே என்பவர் கோத்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது காவல்துறை அந்தப் பகுதியின் சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து, குற்றவாளியை அடையளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.