தமிழகத்தில் பாஜக டெபாசிட் வாங்க அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பாஜகவின் மதவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது என அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் நடைபயணம் செல்கிறோம் என்று தங்களை பிசியாக காட்டுகிறார்கள். பாஜக டெபாசிட் வாங்க அதிமுகவை விட்டால் வேறு வழி இல்லை என்று தெரிவித்துள்ளார்.