உ.பி., மாநிலம் ஹத்ராஸின் பாஜக எம்பி ராஜ்வீர் திலர் (65) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவிற்குப் பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 2019இல் ஹத்ராஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவருக்கு 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக சீட் கொடுக்க மறுத்துவிட்டது. அவருக்கு பதில், அனூப் பால்மிகி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது