இந்தியா முழுவதும் உள்ள PVR – INOX திரையரங்குகளில் இனிமேல் விளம்பரங்கள் திரையிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட இடைவேளியின் போது விளம்பரங்கள் இருக்காது. படங்களின் ட்ரெய்லர்கள் மட்டுமே திரையிடப்படும். படம் தொடங்குவதற்கு முன்பு திரையிடப்படும் விளம்பர நேரத்தை 10 நிமிடங்களாக குறைப்பதன் மூலம் கூடுதல் காட்சிகளை திரையிட்டு விளம்பர வருவாய் இழப்பை ஈடு கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.