ADMK – BJP இடையே மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில் விரைவில் தமிழகத்தில் BJP தலைமை மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. EPS உட்பட ADMKல் யாருக்குமே அண்ணாமலையுடன் சுமூக உறவு இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் டெல்லி சென்ற EPS, தமிழக BJP தலைமையை மாற்றினால் மட்டுமே கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளதாக அமித்ஷாவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து BJP மேலிடம் யோசித்து வருகிறதாம்.

இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக MLA கூறியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ADMK – BJP இடையே மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லையென முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், “பாஜக உடன் கூட்டணியும் இல்ல… ஒரு புண்ணாக்கும் இல்ல..” என காட்டமாக தெரிவித்துள்ளார்.