மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வை வழங்கி வரும் நிலையில் மாநில அரசுகளும் அதனை பின்பற்றி வருகின்றன. தற்போது வரை 42 சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மாதங்களுக்கான அகலவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு இன்னும் மத்திய அரசால் வெளியிடப்படவில்லை.

இருந்தாலும் தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இது குறித்த விவாதங்கள் நடைபெற்ற வருவதால் அகலவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நான்கு சதவீதம் அகல வேலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் அறிவிப்பை வெளியிட்டவுடன் தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.