உடல்நலக் குறைவால் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க முடியாது என்று நடிகையும் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தலைமைக்கு கடிதம் எழுதிருந்தார். அந்த கடிதத்தில்,கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த பிரச்சினையுடன் இருந்து வருகிறேன். பிரச்சாரத்தில் ஈடுபட்டால், அது மேலும் எனது உடல் நிலையை மோசமடைய செய்யும் என மருத்துவர்கள் எச்சரித்தனர். என்னால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர முடியாத நிலையும், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.