நடிகை கங்கனா ரணாவத், தனது புது பென்ஸ் காரில் மும்பையை வலம் வந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் இவர், தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது அரசியல் வருகை ஏற்கெனவே சலசலப்பை கிளப்பிய நிலையில், கட்சியில் இணைந்த கொஞ்ச நாள்களிலேயே ₹2.43 கோடி மதிப்புள்ள புது காரை வாங்கியுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது