தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக்கட்சியினர் இணைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்ட பாஜக-வின் தரவு மேலாண்மை பிரிவு செயலாளரான சந்திரசேகர், இன்று (ஜனவரி 10) அக்கட்சியிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
தென்காசி மேற்கு மாவட்ட தவெக செயலாளர் நியாஸ் முன்னிலையில் அவர் தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டார். அவருக்குக் கட்சித் துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கியக் கட்சிகளின் நிர்வாகிகள் தொடர்ந்து தவெக-வில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
