கடந்த சில நாட்களாகவே காங்கிரஸ் சட்டமன்ற கொறடாவும் எம்எல்ஏவுமான விஜயதாரணி பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த வாரம் முழுவதும் அவர் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து டெல்லியில் முகாமிட்டிருக்கும் அவர் இன்று ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபகாலமாக பலரும் பாஜகவில் இணைந்து கொண்டிருப்பதால் பாஜகவுக்கு மேலும் பலம் கூடி வருகிறது.