இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றது போல பழைய வழிமுறை அல்லது புதிய வழிமுறையை தேர்வு செய்து கொள்ள முடியும். வருமான வரி செலுத்துவதில் இருந்து சிறிய விலக்கு பெற வேண்டும் என்றால் பழைய வழிமுறையை தேர்வு செய்யலாம். புதிய வரி விதியின்படி 7.30 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிய வரி விதி கீழ் ஆண்டு வருமானமாக மூன்று லட்சம் வரையிலும் பெறுபவர்கள் 0 சதவீதம் வருமான வரியும், மூன்று முதல் ஆறு லட்சம் வருமானம் பெறுபவர்கள் ஐந்து சதவீதம் வரையும், 6 முதல் 9 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் 10% வருமான வரி வரையும், 10 முதல் 12 லட்சம் மற்றும் 15 லட்சத்திற்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் 20% வரையும், 15 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுபவர்கள் 30 சதவீதம் வரையும் வரி செலுத்த வேண்டும். அதாவது 7 புள்ளி 60 லட்சம் நீங்கள் வருமானம் பெறுகிறீர்கள் என்றால் நிலையான விலக்கு ஏழு புள்ளி 50 லட்சம் ரூபாய் கழிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே வரி வரம்பில் வருகிறது ஆகும். இதன் அடிப்படையில் தான் உங்களுக்கான வருமான வரி விதிக்கப்படும்.