கர்நாடக பாஜகவில் இருந்து விலகுவதாக பிரபல ரவுடியான ஃபைட்டர் ரவி அறிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெங்களூரு வந்தபோது ஃபைட்டர் ரவி நேரில் சென்று அவரை வரவேற்றது சர்ச்சையானது. இந்த நிலையில் தற்போது கர்நாடக தேர்தலில் ஃபைட்டர் ரவிக்கு  வாய்ப்பு வழங்கப்படவில்லையாம்.

இதன் காரணமாக அவர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். ரவுடி என்பதால் இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் மணிகண்டன் ரத்தோட் எனும் ரவுடிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.