பாஜகவில் இணைந்த விஜயதரணியை நீக்கி தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் விஜயதரணி. அண்மைக்காலமாக தமிழ்நாடு காங்கிரஸ் மீது விஜயதரணி அதிருப்தியில் இருந்த நிலையில், பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் 3வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார் விஜயதரணி. கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த  நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார் விஜயதரணி.

இந்நிலையில் பாஜகவில் இணைந்த விஜயதரணியை நீக்கி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் கூறுகையில், பாஜகவில் இணைந்த விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். டெல்லி தலைமை நேரில் பேச வாய்ப்பு கொடுத்தும் விஜயதரணி புறக்கணித்தார். சட்டமன்ற குழு தலைவர் பேசியும் கடைசி வரை புறக்கணிப்பு செய்தார் விஜயதரணி”என தெரிவித்தார்.