மேற்குவங்க மாநிலத்திற்குச் சென்ற தன்னை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி முறையாக வரவேற்கவில்லை என ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதியின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள மம்தா பானர்ஜி, பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பழங்குடியின மக்களுக்கு எதிராகப் பல்வேறு அநீதிகள் மற்றும் அட்டூழியங்கள் நடந்தபோது ஜனாதிபதி ஏன் வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

​பாஜக தனது அரசியல் ஆதாயத்திற்காக ஜனாதிபதி பதவியை அவமதிப்பதாகவும், அவரைத் தவறான முறையில் பயன்படுத்துவதாகவும் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். ஜனாதிபதி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது எனவும், பழங்குடியின மக்களின் உரிமைகள் நசுக்கப்படும் இடங்களில் அமைதி காத்துவிட்டு, மேற்குவங்கத்தை மட்டும் விமர்சிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார்.