விசிக கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒரு பொருத்தமே இல்லாத அரசியலை சீமான் பேசிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் பெரியாரை விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் வாக்குகளை பெறுவதற்காக தான் சீமான் இந்த உத்தியை பயன்படுத்துவது போல் தெரிகிறது. தந்தை பெரியார் சனாதனத்திற்கு எதிராக இருந்தவர்.
அவர் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக இருந்ததால் அவரை வீழ்த்த வேண்டும் என்று அந்த சமயத்தில் பலர் நினைத்தனர். தற்போது சீமானும் அதேயே செய்து கொண்டிருக்கிறார். அவர் பாசிச அரசியலை நோக்கி நகர்கிறார். தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக சீமான் செயல்படுவதோடு பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளர் போன்று இருக்கிறார். மேலும் பாஜகவின் ஓட்டுகளை குறி வைப்பதற்காகத்தான் சீமான் இப்படி எல்லாம் பேசுவதாக திருமாவளவன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
