பாஜகவை தோற்கடிப்பதே I.N.D.I.A. கூட்டணியின் ஒரே இலக்கு என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற I.N.D.I.A. கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், பாஜகவால் மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதிலிருந்து நாட்டைக் காக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மக்களை பிரித்தாலும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவோம் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்