கடைசி நேரப் பணப் பிரச்சினைகள் மற்றும் ரிலீஸ் தள்ளிவைப்பு போன்ற பலத்த இடியாப்பச் சிக்கல்களுக்கு இடையே, ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான சூர்யா – ஆர்ஜே. பாலாஜி கூட்டணியின் ‘கருப்பு’ திரைப்படம் நேற்று (மே 15) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது. படம் ரிலீஸான முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி, உலகளவில் ரூ.20.66 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா மற்றும் த்ரிஷா ஜோடி இணைந்து நடித்துள்ளதால், திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த வசூல் வேட்டை இன்னும் பல மடங்கு எகிறும் என சினிமா வர்த்தக வட்டாரங்கள் மிக நம்பிக்கையோடு தெரிவித்து வருகின்றன.
