மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து வழக்கு முடியும் வரை புதிய படங்களில் நடிக்கப் போவதில்லை என்று நடிகர் ரவிமோகன் (ஜெயம் ரவி) அதிரடியாக அறிவித்துள்ளார். தோழி கெனிஷா சென்னையை விட்டு வெளியேறுவதாக அறிவித்த நிலையில், நேற்று நடந்த அவசர ப்ரஸ் மீட்டில் அவர் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசினார். தேவையில்லாத அவமானங்களை இனிமேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று அவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து கிடைக்கும் வரை என் படங்கள் திரைக்கு வராது.. பெண்களை பற்றி தெரியாதுனு என்ன சொல்றீங்களா.. இவ்ளோ நாள் பேசாம இருந்ததை முட்டாள் தனமா நினைக்குறேன்.. – ஆவேசமாக பேசிய ரவி மோகன் #Kenisha #RaviMohan #SocialMediaVideo #CelebrityNews #EmotionalJourney #BehindTheScenes… pic.twitter.com/STwCWFIFK9
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) May 16, 2026
மேலும், இவ்வளவு நாட்கள் தான் அமைதியாக இருந்ததை அனைவரும் முட்டாள்தனம் என்று நினைத்துவிட்டதாக அவர் சாடியுள்ளார். பெண்களைப் பற்றித் தனக்குத் தெரியாது என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், தன் குடும்பத்தினரைப் பற்றி இனி யாராவது அவதூறாகப் பேசினாலோ அல்லது சீண்டினாலோ சும்மா இருக்க மாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார்.
