பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் பிறந்தநாளான அக்டோபர் 15 அன்று நடந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதே சமயம், போட்டி முடிந்தபின் ரசிகர் ஒருவரின் செயலால் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் லாகூரில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 276 ரன்கள் எடுத்தது. பின்னர் தென்னாப்பிரிக்கா அந்த இலக்கை துரத்தியது. ஆனால் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் விருந்தினர் அணி ஆல் அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.
Unbelievable😳 Next Level Stardom of King Babar 👑 #Babarazam𓃵 pic.twitter.com/prgk9cZgWT
— 🇵🇸 عليّ (@_Aleeeeey) October 15, 2025
இதற்கிடையில், லாகூரில் உள்ள கத்தாபி ஸ்டேடியம் மைதானத்தில் போட்டி முடிந்த சில நிமிடங்களில், ஒரு ரசிகர் திடீரென பாதுகாப்பு வளையத்தை உடைத்து டிரஸ்ஸிங் ரூம் பால்கனிக்கு ஏறி பாபர் அசாமை நேரில் சந்திக்க முயன்றார்.
இச்சம்பவம் சில நொடிகளுக்கு மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பாதுகாப்பு பணியாளர்கள் துரிதமாக தலையிட்டு அந்த ரசிகரை பிடித்து வெளியே அழைத்துச் சென்றனர். இதனால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மேலும் இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி வருவதாகவும், எதிர்கால போட்டிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
