பாகிஸ்தான் நாட்டின் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த உணவு பற்றாக்குறையால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பாகிஸ்தானில் ஒரு கிலோ கோதுமையின் விலை ரூ. 3,100 ஆக (அந்நாட்டு மதிப்பில்) இருக்கிறது.

அதன்பிறகு ஒரு கிலோ சர்க்கரை யின் விலை ரூ. 155 ஆகவும், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 250 ஆகவும், ஒரு கிலோ கோழிக்கறியின் விலை ரூ. 700 ஆகவும் இருக்கிறது. மேலும் கோதுமை மற்றும் மாவு உள்ளிட்ட பொருட்களை ஏற்றி செல்லும் லாரியை பொதுமக்கள் பின்னால் துரத்தி சென்று மக்கள் அவற்றை வாங்கிச் செல்லும் வீடியோ காட்சிகளும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.