அமெரிக்காவில் தனக்கு ஏற்ற காதலி வேண்டுமென்றே விளம்பரப் பலகை வைப்பதற்காக வாரத்திற்கு சுமார் 33,000 செலவு செய்கிறார் டெக்சாஸை சேர்ந்த அல் கிப்பெர்டி என்ற 70 வயது முதியவர். 2015 ஆம் ஆண்டு முதல் தனிமையில் வசித்து வரும் இந்த முதியவருக்கு காதலியாக பலர் வந்தாலும் யாரும் அன்புக்காக வரவில்லை என்றும் அனைவரும் பணத்தை மட்டுமே தன்னிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.