பாகிஸ்தான் நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்கு கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் நிர்வாக சேவையின் தகுதிக்கான அதிகாரிகளின் தேர்ச்சி விழாவில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஷ் ஷெரிப் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் கடன் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அணுசக்தி நாடு கடன் கேட்பது வெட்கக்கேடானது. மிகவும் சங்கடமாக இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வெளிநாட்டு கடன் தீர்வாக இருக்காது. ஐக்கிய அரபு அமீரக அதிபர் 1 மில்லியன் டாலர் கடன் வழங்குவதாக கூறியுள்ளார். மேலும் அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.