பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஜி-11 செக்டாரில் உள்ள நீதித்துறை வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சக்திவாய்ந்த சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
நீதிமன்றப் பகுதியில் மக்கள் அதிகமிருந்த நேரத்தில், வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இந்த வெடிப்பு ஏற்பட்டதில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரின் வாகனத் தொடரணியை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் காயமடைந்தனர்.
இதைத் தவிர, தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள கேடட் கல்லூரி வாயிலில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். இந்தக் கொடூரமான தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு தடைசெய்யப்பட்ட TTP அமைப்பை ‘ஃபிட்னா அல்-கவாரிஜ்’ (வன்முறையில் ஈடுபட்ட குழு) என்று அறிவித்துள்ளது.
