துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள மால்டெப் மாவட்டத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் அரங்கேறிய மிக மோசமான சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு இளம்பெண் பேருந்துக்காகக் காத்திருந்தபோது, அவர் பின்னாலேயே நின்றிருந்த ஒரு நபர், அப்பெண்ணுக்குத் தெரியாமல் மிகவும் அநாகரீகமான மற்றும் அருவருக்கத்தக்கச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் தனது அலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்ததால், தன் பின்னால் இப்படியொரு வக்கிரம் அரங்கேறுவதை அவர் கவனிக்கவில்லை.

​இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும் உள்ள நெட்டிசன்கள் அந்த நபருக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது” என்றும், “இப்படியான நபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும்” என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதே சமயம், அங்கிருந்தவர்கள் இதைத் தடுக்காமல் வீடியோ மட்டும் எடுத்தது ஏன் என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தப் பகீர் சம்பவம் இஸ்தான்புல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.