உத்தர பிரதேசத்தில் அயோத்தியிலிருந்து கோரக்பூர் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்தில் செப்டம்பர் 23 அன்று பயங்கர சம்பவம் நடந்தது. பேருந்தில் பயணித்த ஒருவர், திடீரென அங்கிருந்த கோடரியை எடுத்து பயணிகளை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அயோத்தி டிப்போவைச் சேர்ந்த அந்த பேருந்தில், ராமு பிரசாத் (வயது 48) என்ற நபர், பேருந்தின் கருவிப்பெட்டியிலிருந்து கோடரியை எடுத்து பயணிகளை தாக்கினார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பயணிகள் உடனடியாக அவரை மடக்கி, பேருந்தில் இருந்த கம்பத்தில் துணியால் கட்டி வைத்தனர்.
ராமு பிரசாத், பயணத்தின் நடுவே திடீரென கத்த ஆரம்பித்தார். பேருந்து தேவையில்லாமல் தாமதமாகிறது என்றும், இதற்கு அரசிடம் பதில் கேட்பேன் என்றும் கூறி, மற்ற பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர், கோடரியை எடுத்து ஆட்டத் தொடங்கினார்.
இந்த தாக்குதலில் மூன்று பயணிகள் காயமடைந்தனர். பயணிகள் அதிரடி நடவடிக்கையாக அவரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்தனர். பேருந்து ஓட்டுநர் உடனடியாக வண்டியை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்.
UP क़े संत कबीरनगर मे अयोध्या से गोरखपुर जा रही रोडवेज बस मे रामू प्रसाद नाम क़े व्यक्ति ने बस मे सवार लोगो पर अचानक ही हथोड़े से हमला कर दिया। 4 यात्रियों को गंभीर चोट आई.. अन्य यात्रियों ने आरोपी को पकड़कर बांध दिया। पुलिस स्टेशन पर गाडी रोक उसे पुलिस क़े हवाले किया गया।
हमले… pic.twitter.com/2okiuauxSs
— TRUE STORY (@TrueStoryUP) September 23, 2025
போலீசார் குற்றவாளியை கைது செய்து விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் பொது இடங்களில் ஏற்படும் ஆபத்துகளை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக உள்ளது. போலீசார் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
